இன்றைய ராசிபலன் (30.12.2017)

  • மேஷம்

    மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக் குள் இருந்த மோதல்கள் விலகும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத் தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: ராசிக்குள் சந்தி ரன் நுழைவதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் உணர்ச்சிவசப் படாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. போராட்டமான நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: திட்டமிடாத செலவு களும், பயணங்களும் குறுக் கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சகோதர வகையில் அலைச்சல் இருக் கும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.

  • கடகம்

    கடகம்: புதிய யோசனைகள் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதார ணமாக முடிப்பீர்கள். இனிமையான நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல் படுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்தி லிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதிக்கும் நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்பத்தில் அமைதி திரும்பும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

  • துலாம்

    துலாம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். உதவிக் கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரங்கள் சாதகமாக இருப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிறமதத்தவர் உதவு வார். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் அமைதி  நிலவும். தன்னம் பிக்கை துளிர்விடும் நாள்.

  • தனுசு

    தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். அதிகாரப் பதவியில் இருப் பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்கள் ஆதாய மடைவார் கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.

  • மகரம்

    மகரம்:  புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்டபரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நினைத்தது முடியும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி யான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • மீனம்

    மீனம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.