சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி சி.எஸ்.ஐ.நகரை சேர்ந்தவர் விஜயன் (வயது 33).
பிரபல ரவுடியான இவர் நேற்று வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து வாழப்பாடி போலீசார் மற்றும் ஜங்சன் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது விஜயனின் முகம், மண்டை உள்பட பல பகுதிகளில் கொடூரமாக தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்ததால் சந்தேக மரணம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது அதன் விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட விஜயன் மீது 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விஜயன் கடந்த 19-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.
விஜயனுக்கும், அந்த பகுதியை சேர்ந்த பிளோமீனா (வயது 23) என்பவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்தது. பிளோமீனா திருமணமாகி 7 ஆண்டுகளுக்கு முன்பு கணவரிடம் விவாகரத்து பெற்று 6 வயது மகனுடன் அந்த பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
விஜயன் அடிக்கடி பிளோமீனாவை சந்தித்ததால் அவர்களுக்கு இடையே கள்ளத்தொடர்பு நீடித்தது. இதனால் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். மேலும் வாயகரா மாத்திரை சாப்பிட்டு விட்டு பிளோமீனாவுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
விஜயன் அடிக்கடி சிறைக்கு சென்று வந்தார். அப்போது விஜயனின் நண்பரான வாழப்பாடியை சேர்ந்த கார்த்திக் (வயது 25) என்பவருக்கு பிளோமீனாவுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போதையில் இருந்த விஜயன் வாயகரா மாத்திரையையும் சாப்பிட்டு விட்டு பிளோமீனாவை அதிகளவில் செக்ஸ் தொந்தரவு செய்தார். அதனை தாங்க முடியாத பிளோமீனா, கார்த்திக்குக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே கார்த்திக் அவரது நண்பர் வெங்கடாச்சலம் (45) என்பவரை அழைத்து கொண்டு பிளோமீனா வீட்டிற்கு சென்றார். பின்னர் பிளோமீனா மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் சேர்ந்து விஜயனை உருட்டு கட்டையால் அடித்து கொன்றனர்.
விஜயனின் உடலை கார்த்திக், வெங்கடாச்சலம் ஆகிய இருவரும் சேர்ந்து தூக்கி சென்று அந்த பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் வீசிவிட்டு ரெயிலில் அடிபட்டு இறந்ததாக கூறி விடலாம் என்றும் நினைத்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து கார்த்திக், வெங்கடாச்சலம், பிளோமீனா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.