இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளின் மரணம் உலகளாவிய ரீதியில் அதிகம் பேசப்பட்டது.
தாய்மையை வெளிப்படுத்தும் வகையில் அவரின் மரணம் உலக மக்களின் மனங்களை நெகிழச் செய்தது.
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த இந்திரா ஜயசூரிய, அவரது மகன் வயிற்றில் இருக்கும் போதே மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.
புற்றுநோயால் பீடித்திருந்த இந்திரா, கர்ப்பமுற்ற நிலையில் குழந்தையை குறை மாத நிலையில் சத்திரசிகிச்சை செய்து வெளியே எடுக்க மறுத்திருந்தார். தனது குழந்தை சரியான வளர்ச்சியோடு, தனது வயிற்றிலேயே பிறக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்தார்.
நீண்ட போராட்டத்தின் பின்னர் பிள்ளையை பெற்ற இந்திரா ஜயசூரிய, சிகிச்சையின் பலன்றி கடந்த வருடம் நவம்பர் மாதம் 2ம் திகதி உயிரிழந்தார்.
இந்நிலையில் இந்திராவினால் வெளியுலகிற்கு கொடுத்த மகனின் தற்போதைய நிலை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தனது பேரனை தூக்கி வைத்திருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இது குறித்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தேவி பாலிகா மகா வித்தியாலயம் மற்றும் புனித பிரிட்ஜட் கன்னிமடம் ஆகிய பாடசாலைகளில் இந்திரா ஜயசூரிய ஆரம்ப கல்வியை பயின்றார். இலண்டன் பிரட்பொர்ட் பல்கலையில் பொருளியல் கற்கைக்கான பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்ததோடு, பிரித்தானியாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
பிரித்தானியாவை சேர்ந்த மார்ட்டின் டிக்கர் என்பவரை இந்திரா ஜயசூரிய திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.