ஐம்பது வருடங்களில் குளிர் மிகுந்த முன்னய மாலை!

2018 ஆரம்பத்தின் முன்னய தின மாலை ரொறொன்ரோவில் கடும் குளிர் கொண்ட நாளாக காணப்படும்.ஐம்பது வருடங்களில் இந்த ஆண்டு இப்படியான கால நிலை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவின் தென்பாகம் தொடர்ந்து குளிரினால் உறைந்து காணப்பட்டு வரும் இவ்வேளையில் புத்தாண்டின் முன்னய மாலை தின கொண்டாட்டங்கள் பல இரத்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டுள்ளன. இந்த வெப்பநிலை வீழ்ச்சி புதிய சாதனையையும் நிலை நாட்டுகின்றது.

50-வருடங்களில் காணப்படாத புத்தாண்டின் முன்னய மாலை உறைய வைக்கும் குளிர் கொண்டதாக காணப்படும்.

ரொறொன்ரோவில் வெப்பநிலை –22 C (குளிர்விக்கும் காற்றுடன் கூடி –30 C )ஆக உணரப்படும்.

1968ல் இத்தினத்தில் வெப்பநிலை –21.8 Cஆக இருந்துள்ளது.

கிறிஸ்மஸ் தினத்திலிருந்து ரொறொன்ரோ அதி தீவிர குளிர் கால நிலை எச்சரிக்கையின் கீழ் உள்ளது.

கனடா சுற்று சூழல் ஒரு குளிர் கால பயண எச்சரிக்கை அறிவுறுத்தலையும் விடுத்துள்ளது.

ரொறொன்ரோ பியர்சன் விமான நிலையம் காலநிலை காரணமாக விமான சேவைகளில் ஏற்படும் தாமதங்கள் இரத்துக்கள் எதிர் பார்க்கப்படும் என தெரிவித்துள்ளது.

திடீர் பனிபுயல்கள் வீதிகளில் அசௌகரியங்களை ஏற்படுத்தாலம் என்பதால் கனடா சுற்று சூழல் சாரதிகளை எச்சரிக்கின்றது. ரொறொன்ரோ பெரும்பாகத்தின் சில பகுதிகளில் 20 முதல் 40 சென்ரி மீற்றர்கள் வரையிலான பனி பொழிவு எதிர்பார்க்கப்படுகின்றது.

கனடா பொது பாதுகாப்பு அனைவரையும் அவசர சேவை திட்டமொன்றை ஏற்படுத்துமாறும் அவசர சேவை பெட்டி, குடி நீர், உணவு, மருந்து, முதலுதவி பெட்டி மற்றும் மின்கல விளக்கு ஒன்று போன்றனவற்றை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்துகின்றது.

625.0.560.380.280.600.660.800.668.160.90

625.0.560.380.280.600.660.800.668.160.90 (1)