குஜராத் விவசாயிகள் வறுமையில் சிக்கித் தவிப்பதும், இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டமும்தான் பாஜக-வின் வீழ்ச்சிக்கு காரணம் என்று அம்மாநில தலைமைச் செயலாளர் ஜே.என். சிங் கூறியுள்ளார்
குஜராத் ஆடை ஏற்றுமதிமேம்பாட்டு கவுன்சில் துவக்க விழா, அகமதாபாத்தில் வியாழக்கிழமையன்று நடைபெற்றது. அப்போது ஜே.என்.சிங் கூறியது பின்வருமாறு,
அண்மையில் நடந்த எலெக்க்ஷனில் அரசின் வெற்றியை பாதித்ததற்கு இரு முக்கிய காரணிகள் இருக்கின்றன;
ஒன்று மாநிலம் முழுதுமே விவசாயிகளுக்கு இருந்த அதிருப்தி,அடுத்ததாக மாநிலம்முழுதும் இருக்கும் வேலையின்மை பிரச்சனை என்று கூறினார்
குஜராத்தில் ஒரு ஆட்சியையே வீழ்த்தும் அளவிற்கு வேலையின்மை பெரும்பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்பது மிகவும் முக்கியமானது..
கார்மெண்ட் தொழில் வளர்ச்சியின் காரணமாக இளைஞர்களுக்கு புதியவேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று கருதுகிறேன்..அரசும் அதற்கு வழிவகை செய்ய வேண்டும்
மோடியால் குஜராத் அடைந்த வளர்ச்சியை நன்றாக உணர்ந்ததால்தான், மக்கள் மீண்டும் பாஜக-வை தேர்ந்தெடுத்து இருக்கின்றனர் என்று அமித்ஷா, அருண் ஜெட்லி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் தண்டோரா போட்டு வருகிறார்கள்
நூலிழை தோல்வியிலிருந்து பாஜக தப்பியதை மறைக்கும் வகையில் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது அப்பட்டமான ஒன்று
இந்நிலையில், குஜராத்தில் பாஜக-வின் செல்வாக்கில் சரிவுஏற்பட்டு அதற்கு விவசாயிகளின் அதிருப்தி,
வேலையின்மை பிரச்சனையே காரணம் என்றும் தலைமைச் செயலாளரே உண்மையை உடைத்துப்பேசியிருப்பது, பாஜக தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.