பிரேமம் மலையாள படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு அந்த முதல் படமே சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அதோடு தென்னிந்திய முழுக்க பரிட்சய மான நடிகையானார். ஆனால் அதன்பிறகு மலையாளத்தில் காளி என்ற படத்தில் நடித்தவருக்கு பின்னர் அங்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. அதனால் தெலுங்கில் சென்று பிடா, எம்சிஏ படங்களில் நடித்தார். அந்த இரண்டு படங்களும் ஹிட்டடித்து தெலுங்கில் சாய் பல்லவியை பிசியாக்கியுள்ளது.
அதனால் அடுத்தபடியாக தெலுங்கில், எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த சர்வானந்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஜனவரி மாதம் முதல் நடிக்கிறார். அதையடுத்து சாய்பல்லவியை வைத்து படம் இயக்க மேலும் சில இயக்குனர்களும் கதை சொல்லி வருகிறார்கள். குறிப்பாக, முன்னணி நடிகர்களின் படம் என்றாலும் ஹீரோக்களுக்கு இணையாக எனது கதாபாத்திரமும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று அவர் கண்டிசனாக சொன்னபோதிலும், தொடர்ந்து படவாய்ப்புகள் சாய் பல்லவியை முற்றுகையிட்டு வருகின்றன.
மேலும், தமிழில் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் கரு படத்தில் நடித்து வருபவர், அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் மாரி-2 படத்தில் நடிக்கும் சாய்பல்லவி, அதையடுத்து சூர்யா -செல்வராகவன் இணையும் படத்தில் நடிக்கிறார். ஆக, தமிழ், தெலுங்கில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார் அவர். சாய்பல்லவின் இந்த வளர்ச்சி மார்க்கெட்டில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட சில இளவட்ட நடிகைகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.