மராட்டிய அரசு 1300 பாடசாலைகளை மூட முடிவு!

மராட்டியத்தில் உள்ள 1300 பாடசாலைகளை மூடுவது  தொடர்பான அறிக்கையை 4 வாரங்களில் அரசு சமர்பிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் மராட்டியத்தில் உள்ள பல பாடசாலைகளில் 10 இற்கும் குறைவான மாணவர்கள் படித்து வருவதாகலும் மேலும் பல பாடசாலைகளில் கல்வித்தரம் குறைவாக உள்ளதாலும் 1300 பாடசாலைகளை மூடவுள்ளதாக மாநில கல்வித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையகம் மாநில கல்வித்துறை அமைச்சுக்கு அனுப்பிய கடிதத்தில் “உங்களது முடிவால் பல ஏழை மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது குறிப்பாக கிராமத்திலிருந்து வரும் மாணவர்கள் இதனால் வேறு தனியார் பாடசாலைகளுக்கு செல்வதற்கான வாய்ப்புக்களும் குறைவு ஆகவே பாடசாலைகளை மூடுவது குறித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் அறிக்கைகள் யாவும் 4 வாரங்களுக்குள் சமர்பிக்கப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளது.

மேலும் மாநில அரசின் இவ் முடிவு குறித்து மராட்டிய மாநில பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

201712281253218142_NHRC-notice-to-Maharashtra-Govt-over-1300-schools-closure_SECVPF