சசிகலா போட்ட அதிரடி உத்தரவு..!! ஆடிப்போன தினகரன்.!!

RK நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றார். ஆளும் கட்சியான அதிமுகவையும்., எதிர்க்கட்சியான திமுகவையும் தோற்கடித்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றுள்ள நிகழ்வால் இரண்டு கட்சிகளும் கலக்கத்தில் உள்ளன.

ops0301_vcx2_15471தினகரனின் வெற்றியை அவரின் ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

நேற்று தினகரன் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார். ஆனால்., வழக்கமாக லைவ் போடும் ஜெயா தொலைக்காட்சி இந்த நிகழ்வை பேருக்கு மட்டும் ஒளிபரப்பிவிட்டு அப்படியே அமைதியாகிவிட்டார்கள்.

சசிகலா சிறையில் இருந்து பரோலில் வந்தபோதும், தினகரன் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தபோதும் விமான நிலையத்தில் இருந்து வீடு வரை நேரடி ஒளிபரப்பு செய்த ஜெயா டிவி இந்தமுறை தினகரனின் பதவியேற்பு விழாவை ஏதோ கடமைக்கு ஒளிபரப்புவது போல ஒளிபரப்பியது தினகரன் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு காரணம்., சிறையில் இருந்து ஜெயா டிவியை நிர்வகிக்கும் விவேக்குக்கு வந்த அதிரடி உத்தரவுதானம்.

ஜெயலலிதா வீடியோ வெளியான விவகாரத்தில் சசிகலா தினகரன் மீது கடும் கோபத்தில் உள்ளாராம்.

அதனால்தான்., சசிகலாவை சந்திக்க சென்ற தினகரனிடம் பேசாமல் திருப்பி அனுப்பியிருக்கிறார்.

தினகரனுக்கு எதிராக., இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவை அரசியலில் களம் இறக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தினகரன் தரப்பில் அதிர்ச்சியில் உள்ளார்களாம்.