தாம்பரம் அருகே மின்சார ரயில் இயக்கப்படும் மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரயில் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியில், மேல்மருவத்தூரில் இருந்து தாம்பரம் நோக்கி ரயில் வந்து கொண்டிருக்கும்போது உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனால் தாம்பரம் செங்கல்பட்டு இடையே ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை கடற்கரையிலிருந்து மேல்மருவத்தூா் சென்ற மின்சார ரயில் இரும்புலியூரில் சுமாா் ஓரு மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மிகுந்த தவிப்புக்கு உள்ளாகினர். பின்னர் தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு, திருமால்பூா் செல்லும் மின்சார ரயில்கள் தாமதமாக மாற்று பாதையில் இயக்கப்பட்டன.