போயஸ் கார்டனில் பரபரப்பு.. விரையும் உயரதிகாரிகள்..!!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்கும் வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.

201706120200567096_Deepa-enters-Poes-Garden-house-in-Chennai_SECVPFஜெயலலிதா என்ற தமிழகத்தின் முக்கிய ஆளுமையின் மறைவுக்குப்பின் அதனுடன் இன்றுவரை ஒரு உணர்ச்சிபூர்வமான தொடர்பில் இருக்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள்.

அந்த வகையில் ஜெயலலிதா என்ற சாதனைப்பெண்மணியை இனி எக்காலத்திலும் அடையாளப்படுத்தும் இடமாக இது இருக்கும்.

இந்த விஷயங்களின் பின்னணியில்தான் நினைவு இல்ல அறிவிப்பு வெளியாகியிருக்கிறது என்கிறார்கள்.

ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டன் இல்லம் அவரது நினைவு இல்லமாக்கப்படும் என கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தின் நடப்பு அரசியல் சூழலில் எடுக்கப்பட்ட இந்த அறிவிப்புக்குப்பின் மிகப்பெரிய அரசியல் உள்ளது என்கிறார்கள்.

போயஸ்கார்டனில் அமைந்துள்ள வேதா இல்லம் ஜெயலலிதாவின் வெற்றி தோல்விகளைப் பார்த்த இல்லம்.

இதை கருத்தில் கொண்டு அரசு விடுத்த இந்த அறிவிப்புக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

வேதா நிலையம் இல்லத்தை நினைவிடமாக்கும் முன் தங்களிடம் உரிய அனுமதி பெற்று அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தீபக் சார்பில் கடிதம் எழுதப்பட்டது.

இருந்தாலும் அதனை ஒருபுறம் சுமூகமான முறையில் முடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

நினைவில்லம் அமைக்கும் பணியின் முதற்கட்டமாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் வேதா இல்லத்தை அளவிடும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது இருந்தே பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

இந்தநிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் வேதாநிலையம் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக்கும் பணியின் முதற்கட்டமாக, அந்த இல்லத்தை அரசுடமையாக்கும் வகையில் இந்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதையொட்டி போயஸ் கார்டன் இல்லத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தீபா தரப்பு ஆதரவாளர்கள் இங்கு குவியக்கூடும் என்பதால், அதிக எண்ணிகையிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.