ஸ்ரீலங்காவின் அரச அதிகாரிகளுக்கு 40 ற்கும் அதிகமான பயிற்சி பாடநெறிகளை வழங்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளது.
45 நாட்களைக் கொண்ட இந்த பயிற்சிகள் இந்திய அரசாங்கத்தின் முழுமையான நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி நெறிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நிர்வாகம், கிராம மற்றும் நகர அபிவிருத்தியில் இந்தியாவின் அணுகுமுறை தொடர்பில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆலய அலுவலக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சிப் பாடநெறிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பயிற்சியில் 45 வயதிற்கு உட்பட்ட அதிகாரிகள் உள்வாங்கப்படவுள்ளனர்.