மதுரையில் வெடிகுண்டு பதுக்கி வைத்த வழக்கில் தேடப்பட்ட 7 பேரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு மதுரை கீழமாரட் வீதி வெங்காய மண்டி பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 2 இடங்களில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.இதனடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இந்தச்சம்பவத்துடன் முகமது ஆரூன்,சவுபிக் அலி,ஜியாவுதின்,சீனி அல்லாபிச்சை,பரூக் அப்துல்லா,முகமது அலி,அபுபக்கர் சித்திக் ஆகிய 7 நபர்களும் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.
இவர்களை தேடி வந்த நிலையில் இன்று சென்னை திருவல்லிக்கேணி விடுதி ஒன்றில் தங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.மேலும் 7 பேர் மீதும் விசாரணை நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.