சிறுமிக்கு தாலி கட்ட தயாராக இருந்த முதியவர்!

மத்தியபிரதேசத்தில் ஏழை குடும்பத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற 51 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Jagannath Mawai என்ற நபருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உயிருடன் இருக்கிறார்.

இந்நிலையில், ஏழை குடும்பத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை இரண்டாவது திருமணம் செய்ய அவரது பெற்றோரிடம் சம்மதம் வாங்கியுள்ளார்.

அதன்படி, கிராமத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கவிருந்தபோது, கடைசி நேரத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த சேவையாளர் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

மேலும், இப்பெண் மைனர் என்பதை உறுதி செய்ய அவர் படிக்கும் பள்ளியில் சென்று சான்றிதழ்கள் உறுதி செய்யப்பட்டன.

முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்ய முயன்றதோடு மட்டுமல்லாமல், ஒரு மைனர் பெண்ணை திருமணம் செய்வது இந்திய திருமண சட்டப்படி குற்றமாகும்.

தற்போது, இந்த முதியவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.