மும்பையில் சனத்தொகையை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.
மும்பையில் சமீப காலமாக வீதி விபத்துக்கள் தீ விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.மேலும் குற்றச்செயல்கள் காரணமாக சமீபத்தில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்றைய தினம் ஏற்பட்ட தீ விபத்து குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினி,“மும்பையில் சனத்தொகை அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுகின்றன.மக்கள் தொகை மீது கட்டுப்பாடுகள் விதித்து ஒவ்வொரு நகரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சனத்தொகையை உள்வாங்க வேண்டும்.மேலும் குறிப்பிட்ட சனத்தொகைக்கு மேல் உள்ள நகரங்களுக்கு பதிலாக மாற்று நகரங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் மும்பையில் அதிகரித்து வரும் விபத்துக்களை குறைப்பதற்கு தனது யோசனையை அரசுக்கு பரிந்துரை செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினி நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.