சென்னை: இரும்புத்திரை ஷூட்டிங்கின்போது விஷால் தன்னை திட்டியதாக ரோபோ ஷங்கர் தெரிவித்துள்ளார். மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள இரும்புத்திரை படம் வரும் ஜனவரி மாதம் 26ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
விழாவில் ரோபோ ஷங்கர் கலந்து கொண்டு பேசியதாவது,
இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கும், விஷால் சாருக்கும் நன்றி. ஒரு நடிகர், ஹீரோ என்பதை தாண்டி விஷால் பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.
உதவும் குணம் உள்ள மனிதர் விஷால். இரவும், பகலும் ஷூட்டிங் நடந்தாலும் போன் வந்து கொண்டே இருக்கும். உடனே எடுத்துப் பேசி உதவி செய்ய ஏற்பாடு செய்வார். அதற்காகவே அவருக்கு ஒரு சல்யூட்
ஒரு சீரியஸான காட்சியை படமாக்கும்போது அனைவரும் சீரியஸான மூடில் இருப்போம். அப்போது விஷால் என்னிடம் வந்து இந்த சீனை எப்படி பண்றேன்னு பாருங்க ரோபோ என்று சொல்லிவிட்டு செல்வார்.
கட் பண்ணா அவ்ளோ சீரியஸான, எமோஷலான ஒரு சீனை காமெடியாக்கி தெறிக்கவிட்டு அதன் பிறகு நாம் மறுபடியும் அந்த சீனில் நடிக்கவே முடியாது. அந்த மாதிரி கிட்டத்தட்ட 28 டேக் எல்லாம் எனக்கும், அவருக்கும் போயிருக்கு.
என்னை அசிங்கமா கழுவிக் கழுவி எல்லாம் ஊத்தியிருக்கிறார். தயவு செய்து ரோபோவை வெளியே அனுப்புங்க, ஏன் இப்படி பண்ணுகிறார்னு பாருங்க என்று என்னை அவ்ளோ திட்டியிடிருக்கிறார் என்றார் ரோபோ ஷங்கர்.
Intégrer la vidéo à votre site avec le code d’intégration ci-dessus