27 வயதில் மகனா ஐஸ்வர்யா ராய்க்கு?…பதறிப்போன அபிஷேக் பச்சன்!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் நான் என்று, அம்ருதா என்ற பெண் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருப்பது அனைவரும் அறிந்த விஷயம்.இந்தநிலையில் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் மகன் என்று 27 வயது வாலிபர் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

large_aiswarya-rai--27-years-old-4800பரபரப்பை ஏற்படுத்திய அந்த இளைஞனின் பெயர் சங்கீத் குமார். 27 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞன் கூறுகையில்;

எனது தந்தை விசாகபட்டிணத்தை சேர்ந்த மவுலு ஆதிரெட்டி. எனது தந்தை ஐஸ்வர்யா ராய் உதவியுடன் டெஸ்ட் டியூப் மூலம் என்னை பெற்றெடுத்தார். ஆரம்பத்தில் இரண்டு வருடம் ஐஸ்வர்யா ராய் குடும்பத்துடன் லண்டனில் வசித்தேன்.

பின்னர்,எனது தந்தை என்னை விசாகப்பட்டிணத்திற்கு அழைத்து வந்து விட்டார்.தற்போது அவரின் அரவணைப்பில் தான் உள்ளேன் இவ்வாறு கூறினார்.இந்த இளைஞனின் குற்றசாட்டை கேட்ட அமிதாப் பச்சன் குடுப்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால்,அவர் கூறியபடி தான் ஐஸ்வர்யா ராயின் மகன்தான் என்பதற்கான எந்த ஒரு ஆவணமும் அவரிடம் இல்லை. மேலும் அந்த வாலிபர் சென்னையில் சவுன்ட் இன்ஜினியராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.