சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாக தெரிவித்திருக்கும் நிலையில் அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது
ரஜினியின் 31ஆம் தேதி அறிவிப்பு இப்படித்தான் இருக்கும் என்று அரசியல்வாதிகளும், பிரபல நடிகர்களும் பல்வேறு கருத்துக்கள் கூறி வரும் நிலையில் ரஜினியின் அறிவிப்பு குறித்து நகைச்சுவை நடிகர் விவேக் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
மக்களுக்கும், ரசிகர்களுக்கும் சாதகமான முடிவை ரஜினி அறிவிப்பார் என எதிர்பார்க்கிறேன். லஞ்சம், ஊழல் இல்லா தமிழகம் உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்: 1996இல் இருந்தே ரஜினி அரசியலுக்கு வருவார் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்: இவ்வாறு கூறிய நடிகர் விவேக், ‘அரசை எதிர்பார்க்காமல் மாணவர்கள், இளைஞர்கள் ஏரி, குளங்களை தூர்வார முன்வர வேண்டும்’ என்றும் தெரிவித்தார்.