சிதைக்கப்பட்ட நாணயத்தாள்களை மாற்றுவதற்கான காலஅவகாசம் நீடிப்பு

சிதைக்கப்பட்ட, சேதமாக்கப்பட்ட, மற்றும் கிறுக்கப்பட்ட நாணயத்தாள்களை மாற்றிக் கொள்வதற்கான காலஅவகாசம் சிறிலங்கா மத்திய வங்கியினால் நீடிக்கப்பட்டுள்ளது.

moneyசிதைக்கப்பட்டு, சேதமாக்கப்பட்ட, கிறுக்கப்பட்ட நாணயத்தாள்கள் இனி செல்லுபடியாகாது என்றும், அவற்றை வங்கிகளில் இன்றைக்குள் மாற்றிக் கொள்ளுமாறும், சிறிலங்கா மத்திய வங்கி அறிவித்திருந்தது.

அத்துடன், இந்தக் காலஅவகாசம் முடிந்த பின்னர் சிதைக்கப்பட்ட, கிறுக்கப்பட்ட நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் சிறிலங்கா மத்திய வங்கி எச்சரித்திருந்தது.

இந்தநிலையில், சிதைக்கப்பட்ட, கிறுக்கப்பட்ட நாணயத்தாள்களை மாற்றிக் கொள்வதற்கான காலஅவகாசத்தை நீடிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, 2018 மார்ச் 31ஆம் நாளுக்குள் இத்தகைய நாணயத் தாள்களை மாற்றிக் கொள்ளுமாறு சிறிலங்கா மத்திய வங்கி அறிவித்துள்ளது.