5 நாட்களாக விமான நிலையத்தில் தவிக்கும் பயணிகள்!

லண்டனில் உள்ள விமான நிலையம் ஒன்றில் விமானம் இன்றி சுமார் 800 பயணிகள் விமான நிலையத்திலேயே நாட்களை கழித்து வருகின்றனர். ஐந்து நாட்களாக இவர்கள் விமான நிலையத்திலேயே தங்கி வருகின்றனர். சிலர் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள விடுதிகளில் தங்கி வருகின்றனர்.

29CHSKOBALIகிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடத்தை கொண்டாடுவதற்காக நைஜீரியாவை சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டிற்கு செல்வதற்காக Med View Airline விமான நிறுவனத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் இயங்கவில்லை. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இது தொடர்பாக Ola Dami என்ற பயணி கூறுகையில்:- எனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக எனது சொந்த ஊருக்கு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன் ஆனால் விமான நிலையத்தின் இந்த செயலால் எனது சொந்த ஊருக்கே செல்லமாட்டாமல் உள்ளேன். இதை நான் அவமதிப்பாக உணருகிறேன். அத்துடன் 2018 ஆம் ஆண்டுவரை எந்த டிக்கெட்டும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக Abibey Kukoyi என்ற பயணி கூறுகையில்:- நான் வியாபார நிமித்தமாக Lagos செல்வதற்கு டிசெம்பர் 23 ஆம் திகதி டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன். ஆனால் தற்போதுவரை எந்தவித தெளிவான முடிவும் கிடைக்கவில்லை. விமான டிக்கெட்டுக்காக €1,000 செலுத்தியிருந்தேன். இப்படி குளறுபடி செய்யும் இந்த விமான நிறுவனத்தை மூட வேண்டும் என கூறியிருந்தார்.

மேலும் சுமார் ஐந்து நாட்களாகவே விமான நிலையத்தில் தங்கி இருக்கும் இந்த பயணிகளின் நலன் கருதி விமான நிறுவனம் வெகு விரைவில் இதற்கான நடவடிக்கையை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.