ரஜினிக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள்..!

நடிகர் ரஜினி காந்த் அரசியலிற்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்விக்கு இன்று ராகவேந்திரா மண்டபத்தில் பதிலளித்துள்ளார். இந்த வருடத்திற்கான சட்ட மன்ற தேர்தலில் தனி கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட போவதாக கூறியுள்ளார் ரஜினி.

ரஜினி அரசியல் பிரவேசத்திற்கு வாழ்த்துக்கள் கூறிய பிரபலங்கள்..!

இது குறித்து பல பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். அந்த வகையில், ரஜினி அறிவிப்பை கேட்ட பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தராஜன் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, துணிச்சலுடன் அரசியல் களத்துக்கு வருகிறேன் என ரஜினி அறிவித்துள்ளார் என்றும் தமிழிசை கூறியுள்ளார். மேலும், பிரபல நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன், சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக..! என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறி அவரது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

ரஜினி அரசியல் பிரவேசத்திற்கு வாழ்த்துக்கள் கூறிய பிரபலங்கள்..!

அதைத்தொடர்ந்து, நடிகை கஸ்தூரி, பணம் பதவிக்காக அல்ல, கடமைக்காக, நன்றிக்காக..! மக்கள் நலனுக்காக, ஆன்மிக அரசியல் நமது மந்திரம்-உண்மை.., உழைப்பு.., உயர்வு.., நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும், அடுத்த தேர்தலில் அத்தனை தொகுதியிலும் நம்ம படையும் இருக்கும்..! மேலும், கடைசில சொன்னாரு பாருங்க… அரசியலுக்கு அப்புறமா வருவோம் …. அதுவரை போராட்டம் வேண்டாம், ஆர்பாட்டம் வேண்டாம், அரசியல் பேசவேண்டாம். அப்போ எப்பிடி??? அதுதான் புரியவில்லை என்று ட்வீட் செய்து ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு வருகை என்று கூறினார் கஸ்தூரி.

ரஜினி அரசியல் பிரவேசத்திற்கு வாழ்த்துக்கள் கூறிய பிரபலங்கள்..!