நடிகர் ரஜினி காந்த் அரசியலிற்கு வருவாரா இல்லை வரமாட்டாரா என்ற கேள்வி தமிழகத்தில் பல வருடங்களாகவே நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக திடிரென்று ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்த நிலையில் இன்று ரஜினி அரசியலிற்கு வருவதாக கூறியுள்ளார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக அவரது கட்சி நிற்கும் என்று தெரிவித்த அவர், மாநிலத்திற்காக நான் இதை எல்லாம் செய்வேன் என்று கூறிவிட்டு அரசியலில் கால் வைத்ததற்கு பிறகு மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டால் பதவியை ராஜனாமா செய்துவிடுவேன் என்றும் ஆவேசமாக அறிவித்திருக்கிறார் ரஜினி. மேலும், அவரது கட்சியில் கொள்கை என “நல்லதே நினைப்போம்..! நல்லதே பேசுவோம்..! நல்லதே செய்வோம்..!” என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, அவர் ஊழலை ஒழிக்க தான் அரசியல் வந்ததாக கூறினார். தமிழ்நாட்டில் ஊழல் அதிகமாக ஊடுருவி இருப்பதால், நிச்சயமாக ஊழலை ஒழிப்பேன் என்று கூறினார் ரஜினி. மேலும், இதை கேட்ட அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.