கொஞ்ச நாளைக்கு தான் பதவியை அனுபவிக்க முடியும்!

மூன்று மாதத்திற்குள் ஆட்சியை கவிழ்ப்பேன் என்று கூறிய தினகரன், கொஞ்ச நாளைக்கு தான் பதவியை அனுபவிக்க முடியும் என முதலமைச்சர் பழனிச்சாமி மறைமுகமாக தினகரனை எச்சரித்துள்ளார்.

picநீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்று வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், முதலமைச்சர் பழனிச்சாமி, துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர். அப்பொழுது பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, “துரோகிகள் கொல்லைப்புறமாக வந்து ஆட்சியை கைப்பற்ற பார்க்கிறார்கள். அதற்கு தக்க பாடத்தை மக்களும், தொண்டர்களும் புகுத்துவார்கள். உங்களிடம் இருப்பவர்கள் வேண்டுமானால் ஸ்லீப்பர் செல்லாக இருக்கலாம். ஆனால் எங்களிடம் இருப்பவர்கள் எல்லாம் பத்தரை மாத்து தங்கம். ஏனெனில் எங்கள் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் உழைப்பால் உயர்ந்தவர்கள்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சி அழிந்துவிடும், ஆட்சி கவிழ்ந்துவிடும் என கற்பனை கனவு கண்டவர்களுக்கு எல்லாம் இன்று சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டது. எதிர்க்கட்சி தலைவர் தொடர்ச்சியாக ஆட்சி கவிழும் என கூறி வந்தார். ஆனால் ஆட்சி நிலைத்து நின்றது. இப்பொழுது புதிதாக, பணம் கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன், ‘இந்த ஆட்சியை மார்ச் மாதத்திற்குள் கலைப்பேன்’ என கூறியுள்ளார். நீ இருந்தா தானே கலைப்பாய். எங்கே இருபாய்ன்னு பாத்துக்கலாம் என கூறியதோடு, ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான். நல்லது நினைத்தால் நல்லது நடக்கும். கெட்டது நினைத்தால் கெட்டு தான் போவார்கள் என விழாவில் பேசினார்.