அதை எல்லாம் என்னால செய்ய முடியாது…!!

RK நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஆளும் கட்சியான அதிமுக படு தோல்வி அடைந்துள்ளது.

RK நகர் வாக்காளர்களுக்கு இதுவரை நன்றி சொல்ல தினகரன் செல்லவில்லை. RK நகர் தொகுதி மக்கள் பெரும்பாலானோர் வீட்டிலும் இருபது ரூபாய் நோட்டைப் பத்திரமாக வைத்திருக்கிறார்கள்.

தேர்தல் முடிந்ததும் எப்படியும் ஓட்டுக்காகப் பேசிய பணம் தங்களுக்கு வந்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்கள்., நாட்கள் செல்ல செல்ல நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.

தேர்தல் முடிவு வந்ததும் பணம் கொடுக்குறதா சொன்னீங்க. நீங்க சொன்னதை நம்பித்தானே ஓட்டு போட்டோம். எப்போ கொடுப்பீங்க?’ என மாறி மாறி குடைச்சல் கொடுத்து வருகிறார்களாம்.

தினகரன் பதவி ஏற்பு விழா முடிந்ததும்., தினகரனை சந்தித்த நிர்வாகிகள், RK தொகுதி மக்கள் பணம் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. எப்போ கொடுக்கலாம்னு சொல்லிட்டீங்கன்னா நாங்க அவங்க கிட்ட சொல்லிடுவோம்..’ என்று கேட்டுள்ளார்.

ஆனால் தினகரனோ, இப்போதானே தேர்தல் முடிவு வந்துருக்கு. பணம் என்ன எங்க வீட்டு தோட்டத்திலா காய்க்குது..? அப்படியே எடுத்து கொடுக்குறதுக்கு.

மொதல்ல., RK நகர் தொகுதி மக்களுக்கு என்ன அடிப்படை தேவைகள் வேண்டுமோ அதை முதலில் செய்து கொடுப்போம். மற்றதை அப்புறம் பேசிக்கலாம் என்று மழுப்பலாக கூறியிருக்கிறார்.

தினகரனிடம் இருந்த இந்த பதிலை எதிர்பார்க்காத நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இனிமேல் RK நகர் தொகுதி மக்கள் முகத்தில் எப்படி முழிப்பது..? என்று நிர்வாகிகள் அனைவரும் புலம்பி வருகிறார்களாம்.