இப்படியொரு கேவலமா..? கமல் கொடுத்த அதிர்ச்சி..?

rajinikanth-and-kamal-haasan-19-1500448198இரண்டாவது கட்டமாக தனது ரசிகர்களை சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், அவர்களிடையே பேசும்போது 2.0, காலா பட ரிலீசிற்குப் பிறகு ஆண்டவன் என்ன சொல்கிறானோ அதை பொருத்திருந்து பார்ப்போம் என்று பேசியுள்ளார்.

சென்னையில் ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று 6வது நாளாக ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.

இன்று தனது அரசியல் அறிவிப்பு குறித்து சொல்வதாக இருக்கிறார்.முன்னதாக சில மாதங்களுக்கு முன் ரஜினி பல்வேறு மாவட்ட ரசிகர்களை ஏற்கனவே சந்தித்தார்.

அப்போது போர் வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி இருந்தார். அடுத்த மாதம் ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக ரஜினி ரசிகர்கள் மாநாடு நடைபெறும் என்று தெரிகிறது. இந்த மாநாட்டில் கட்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஜினி சொல்வார் என்று கூறப்படுகிறது.

இன்று இரசிகர்கள் சந்திப்பில் வெளியிடும் தகவலை பொறுத்தே அடுத்தகட்ட நகர்வு அமைந்திருக்கும்.

ஒரு புறம் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து இரசிகர்கள் ஆர்பரித்து கொண்டிருக்க கமல் அதிரடி ட்வீட் ஒன்றை போட்டு தள்ளியுள்ளார்.

அரசியல் ட்வீட்டை எதிர்பார்த்த நேரத்தில் கமல் இன்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

‘புது வருடம் கண்டிப்பாய்ப் பிறந்தே தீரும். பது உணர்வும் பொது நலமும் நம் மனதில் பிறக்க வாழ்த்துக்கள். இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும் ஆர்வம் பொங்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.’

என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

புத்தாண்டு வாழ்த்து சொன்னாலும் அதிலும் ‘இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும்’ என நச்சுன்னு அரசியலை வைத்து கூறி இருக்கிறார்.

ஆனால் இது யாரை மையப்படுத்தி கூறினார் என்பது தெரியாமல் தான் அனைத்து தரப்பினரும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.