உலகக் கிண்ணப் போட்டியில் கட்புலனற்றோர் அணி!

டுபாயில் நடைபெறவுள்ள கட்புலனற்றோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி விரைவில் புறப்படவிருக்கிறது.

ஐந்தாவது முறையாக நடைபெறவுள்ள கட்புலனற்றோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

சுமார் மூன்று வாரங்கள் நடைபெறவுள்ள இத்தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி பாகிஸ்தானில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணிக்கு தேசப்பிரிய தலைமை தாங்கவுள்ளார். அவருடன் மொத்தமாக 16 வீரர்களும் 4 அதிகாரிகளும் டுபாய் புறப்படவுள்ளனர்.

இத்தொடரில் இலங்கை தவிர இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் முதன்முறையாக நேபாளமும் களமிறங்கவுள்ளது.

cricket_11