சைவமக்களால் அனுட்டிக்கப்படும் திருவெம்பாவை நோன்பினை முன்னிட்டு, அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் ஈழத்துச் சிதம்பரம் நோக்கிய பாத யாத்திரையானது, இன்று (31.12.2017) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியது.
சைவ மக்களிடையே ஆன்மீக நம்பிக்கையையும், இளைஞர் யுவதிகளிடையேயும் மாணவர்களிடையேயும் மத நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கிலும் சைவ மகா சபையினால் வருடாந்தம் இப்பாத யாத்திரை நடத்தப்பட்டு வருகின்றது.
வடக்கு, கிழக்கின் பல பாகங்களிலும் இருந்து வருகை தருகின்ற சிவனடியார்கள் இதில் கலந்துகொள்கின்றனர். இன்று காலை 7.00 மணிக்கு சம்பில்துறை சம்புநாத ஈச்சரத்தில் இருந்து ஆரம்பமாகிய இந்தப் பாத யாத்திரை, மாலை 6.00 மணிக்கு ஈழத்துச் சிதம்பரத்தைச் சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.