நடிகர் சிம்பு, ஓவியா இணைந்து எடுத்த புகைப்படம் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளை அடிக்கடி சந்திப்பவர் என்று பட்டியல் எடுத்தால் அதில் முதலில் நடிகர் சிம்புவின் பெயர் தான் வரும். கடைசியாக AAA பட தயாரிப்பாளருடன் சர்ச்சையில் சிக்கிய சிம்பு இனி நடிக்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படும், இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடித்துவருகிறார். பல அக்ரீமெண்ட்களில் கையெழுத்திட்டு நடித்துக்கொண்டிருக்கும் அவர் ஆங்கிலத்தில் ஒரு படம் தயாரித்து வருகிறார்.

5a48812baaceb-IBCTAMILஅந்த படத்தின் படம்பிடிக்கும் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது. அந்த படத்தை தொடர்ந்து தற்போது தனி ஒருவன், வேலைக்காரன் என சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு, ஓவியாவுடன் இணைந்து எடுத்த இந்த புகைப்படம் குறித்து தெரியுமா..?

இந்த நிலையில் பிக் பாஸ் புகழ் ஓவியா, ஆர்.ஜே. விஜய்யுடன் இணைந்து சிம்பு எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஓவியா மற்றும் சிம்பு இணைந்து படத்தில் நடிக்கப்போவதாக கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் மூவரும் இணைந்து ஒரு மியூசிக் ஆல்பத்திற்காக வேலை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எது உண்மை என்று அதிகாரபூர்வ செய்திகள் வெளியானால் தெரியவரும்.