பிரபல நடிகை திரிஷா தமிழில் பல படங்கள் நடித்துள்ளார், இவர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து முன்னணி நடிகையாக இருப்பவர். இவர் பல படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தவர். இவரும் கேரளாவை சேர்ந்த நடிகை.
இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடம் உண்டு. சமூக நலனிர்காக பல விஷயங்கை செய்துவரும் நடிகைகளில் இவருக்கு மிகுந்த இடம் உள்ளது. இவருக்கு யூனிசெப்பின் நல்லெண்ண தூதராக கொரவம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் யூனிசெப் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கழிவறை கட்டும் நிகழ்ச்சியில் திரிஷா கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வின் மூலம் வடநெமிலி கிராமத்திற்கு கழிவறைகள் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார் திரிஷா. அப்போது அவர் பேசியதாவது: “கழிவறைகள் பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் காக்க முடியும். அது உயிரை காக்கும். அதுமட்டுமின்றி கழிவறை பயன்படுத்துவது பெண்களின் பாதுகாப்புக்கும், மரியாதைக்கும் அவசியமானது” என்று கூறினார்.