சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை நிவேதா தாமஸ். தமிழில் பல படங்களில் நடித்தவர். இவர் விஜய்யுடன் நடித்த ஜில்லா படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவருக்கு பல படங்களில் நடிக்க தற்போது வாய்ப்புகள் குவித்த நிலையிலும், தற்போது நடிப்பிற்கு நோ சொல்லி வருகிறாராம்.
இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் படிப்பிலும் உயரத்தை அடைய வேண்டும் என்று அவரது பெற்றோர் விரும்புவதால். தற்போது அவர் படிப்பில் கவனம் செலுத்தி வருவதால், படிப்பு முடிந்த பிறகு மீண்டும் நடிப்பார் என்று கூறியுள்ளார்.
இவர் ஆர்க்கிடெக்ட் படித்து வருகிறார், தற்போது தேர்வுகளில் கவனம் செலுத்தி வருகிறார். அனைத்து தேர்வுகள் முடிந்தவுடன் படங்களில் கமிட்டாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.