பாட்ஷா பீட்சா கடை!

காலா பட ரஜினி கம்­பீ­ர­மாக உட்­கார்ந்­தி­ருக்­கிறார். ‘தில்­லு­முல்லு’ ரஜினி நக்­க­லாக சிரிக்­கிறார். துப்­பாக்­கி­யுடன் ‘கபாலி ரஜினி முறைக்கிறார்.

ராஜா­தி­ராஜா, படை­யப்பா, மனிதன், தள­பதி என வித­வி­த­மான போஸ்­களில் திரும்­பிய பக்கம் எல்லாம் சுவர்­களை சூப்பர் ஸ்டார் அலங்கரிக்­கி­றார்.

ஆச்­ச­ரி­ய­மாகப் பார்த்துக் கொண்டே மெனு கார்டை புரட்­டினால், அங்­கேயும் ராஜாதி ராஜா பீட்சா, நான் சிகப்பு மனிதன் பீட்சா, அண்ணாமலை பீட்சா என அனைத்­துமே சூப்பர் ஸ்டார் நடித்த பட டைட்­டில்­கள்தான்.

நடிகர் ரஜி­னியின் தீவிர ரசி­க­ரான சென்­னையை சேர்ந்த ராம­நாதன், தன் பீட்சா கடைக்கு  ”சூப்பர் ஸ்டார் பீட்சா’ எனப் பெயர் வைத்­த­துடன் அனைத்­தையும் சூப்பர் ஸ்டார் மய­மா­கவே மாற்­றி­யுள் ளார்.

CaptureFGH HH CFவணக்கம் என ஒரு குரல் நம்மைப் பார்த்து ஒலிக்க, பதி­லுக்கு வணக்கம் சொல்லி அறி­மு­கங்­களை முடித்துக் கொண்டோம். பார்ப்­ப­தற்கு தில்­லு­முல்லு படத்தில் வரும் இந்­திரன் போல க்ளீன் ஷேவில் இருந்தார் ராம­நாதன்.

அவ­ரிடம் பேசிய போது…“வழக்­க­மாக ஒரு ரசி­கரோ ரசிகர் பட்­டா­ளமோ தங்கள் மனம் கவர்ந்த சினிமா ஹீரோ நடித்த திரைப்­படம் வெளியாகும் போதும், அந்த நடி­க­ருக்கு பிறந்­தநாள் வரும் போதும், அவ­ருக்கு போஸ்டர் ஒட்­டு­வது, பேனர் கட்­டு­வது, ரசிகர் மன்றம் அமைப்­பது, பால் அபி­ஷேகம் செய்­வது, முதல் நாள் முதல் காட்சி பார்ப்­பது, திரையில் அவர் ஆடும் போதும் பாடும் போதும் நடிக்கும் போதும் விசில் அடித்து ஆர­வாரம் செய்து தங்கள் அன்பை வெளிப்­ப­டுத்­து­வார்கள். இது­போன்ற ரகி­கர்­க­ளைத்தான் நாம் இதுநாள் வரையில் பார்த்­தி­ருப்போம்.

ஆனால் இவை அனைத்­திற்கும் கிரீடம் சூட்­டு­வ­து­போல சூப்பர் ஸ்டார் மீதான என் அன்பை வித்­தி­யா­ச­மாக வெளிப்­ப­டுத்த வேண்டும் என விரும்­பினேன். அதன் வெளிப்­பா­டுதான் இந்த பீட்சா கடை!

சென்­னைதான் என்­னு­டைய பூர்­வீகம், எல்­லோ­ரை­யும்­போல பள்ளி படிக்கும் காலத்­தி­லி­ருந்தே ரஜி­னிகாந்த் என்றால் கொள்ளை இஷ்டம். அவர் சிரிப்பு, நடிப்பு, வசன உச்­ச­ரிப்பு, ஸ்டைல் என அவரை எனக்குப் பிடித்­துப்­போகப் பல கார­ணங்கள் உண்டு.

கல்­லூரிப் படிப்பை முடித்­த­வுடன் கேம்பஸ் இன்­டர்­வி­யூவில் தேர்­வாகி ஐ.டி. கம்­ப­னியில் வேலைக்குச் சேர்ந்தேன். காலை, மாலை, இரவு என ஷிஃப்ட் கணக்கில் நேரம் காலம்­கூடப் பார்க்­காமல் வேலை பார்த்­தது உண்டு.

அப்­ப­டியே ஆறு வருடம் ஓடி விடவே அந்த இயந்­தி­ர­ம­ய­மான வாழ்க்­கையில் இருந்து விடு­பட்டு, தலைவர் பாணியில், நான் எப்­போதும் என் மன­சுக்கு பிடிச்ச வேலைய மட்­டும்தான் செய்வேன் என்­ப­தற்கு ஏற்­ற­படி என் பணியை மாற்­றிக்­கொள்ள விரும்­பினேன்.

அப்­போ­துதான் மேலை நாடு­களில் இருப்­ப­து­போல ஏதேனும் ஒரு பிர­ப­ல­மான தீம் ஒன்றை மையப்­ப­டுத்தி உண­வகம் ஒன்றை ஆரம்­பிக்க நினைத்தேன்.

அந்த நேரத்தில் கையில் கொஞ்சம் சேமிப்பு இருக்­கவே, தலைவர் பெய­ரி­லேயே ஆரம்­பித்து விடலாம் என முடிவு செய்து சூப்பர் ஸ்டார் பீட்­சாவை ஆரம்­பித்தேன்.

படை­யப்பா படத்தில் ரஜினி சொல்லும் என் வழி தனி வழி வச­னத்தைப் பின்­பற்றி சூப்பர் ஸ்டார் பீட்­சாவை இந்­தி­யாவின் தனி பிராண்­டாக உரு­வாக்­கினேன்.

மேலை நாடு­களின் பீட்சா நிறு­வ­னங்­க­ளோடு கூட்­டுச்­சே­ராமல் நான் தனித்­து­வ­மாக இயங்க வேண்­டு­மென்ற எனது எண்­ணத்­திற்கு சூப்பர் ஸ்டார் பீட்சா கை கொடுக்கும் கையாக அமைந்­தது.

கடையின் உட்­புற சுவர், டேபில் என திரும்­பு­கிற எல்லா பக்­கமும் ரஜி­னி­காந்தின் நிழற் படங்­களும் அவர் பேசிய வச­னங்­களும் வரைந்தோம்.

அதே­போல பீட்­சாவின் பெயர்­களும் தனித்­து­வ­மான இந்­திய ஸ்டைலில் இருக்க வேண்­டு­மென எண்­ணி­யதால், தலைவர் நடித்த படங்களின் பெயர்­க­ளையே பீட்­சா­விற்குப் பெய­ராக வைத்தோம்.

அண்­ணா­மலை பீட்­சாவில் பால், பன்னீர் அதி­க­மாக இருக்கும். பணக்­காரன் பீட்சா மெனு கார்­டி­லேயே அதிக விலைக்குக் கொடுக்­கிறோம். அரு­ணாச்­சலம் பீட்சா, மூன்று முகம் பீட்சா என வரி­சை­யாகப் பீட்­சாவின் லிஸ்டை அடுக்கிக் கொண்டே போகலாம்.

எங்கள் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு நாங்கள் கொடுக்கும் பீட்சா ருசி­யா­கவும் ப்ரெஷ்­ஷா­கவும் இருக்க வேண்­டு­மென்­ப­தற்­காகப் பீட்­சாவில் சேர்க்­கப்­படும் இன்க்­ரீடென்ட்ஸ் அனைத்­துமே அன்­றாடம் கடை­களில் வாங்கி வந்து தயா­ரிக்­கிறோம்.

ஒலிவ் ஆயில், பன்னீர், சீஸ் அனைத்­துமே உள்­ளூரில் இருக்கும் பால் பண்­ணை­க­ளி­லி­ருந்து வாங்கி வரு­கிறோம்.ஒரு தொழிலைத் தொடங்­கும்­போது  எல்­லோரும் சந்­திப்­பது போல் எனக்கும் சூப்பர் ஸ்டார் பீட்­சாவை ஆரம்­பித்த போது நிறையச் சிக்­கல்கள், இடை­யூ­றுகள் இருந்­தன.

மின்­வெட்டு, சரி­யான ஊழி­யர்கள் கிடைக்­கா­தது எனப் பல்­வேறு சிக்­கல்கள். அந்த நேரத்தில் கஷ்­டப்­ப­டாமல் எது­வுமே கிடைக்­காது என்கிற தலை­வ­ரோட வச­னம்தான் கைகொ­டுத்­தது.

கொஞ்ச நாளில் அனைத்­துமே சரி­வ­ரவே சூப்பர் ஸ்டார் பீட்­சாவை விரிவு செய்தேன். அப்­ப­டியே நண்­பர்­களும் என்­னு­டைய முயற்­சிக்கு ஆத­ரவு தரவே தமி­ழகம் முழு­வதும் சூப்பர் ஸ்டார் பீட்­சாவை விரிவு செய்­யலாம் என யோசனை தந்­த­தோடு அவர்­க­ளா­கவே அவர்­க­ளது ஊரில் அமைக்­கவும் விருப்பம் தெரி­வித்­தனர்.

சென்னை பெசன்ட் நகரில் தொடங்­கி­யது தற்போது திருச்சி, குமரன்நகர் மற்றும் தில்லைநகர், சேலம் நியூ பேர்லேண்ட், கோவை சாய்பாபா காலனி என வெவ் வேறு ஊர்களுக்கும் கிளை களாக விரிந்துள்ளது.

கடந்த டிசெம்பர் 12 ஆம் திகதி சூப் பர் ஸ்டாரின் பிறந்த நாளைக் கொண்டாடியபோது அந் நாளை ஸ்டைல் டே எனக் கொண் டாடியுள்ளோம் என்றவர் மகிழ்ச்சி” எனக் கபாலி ஸ்டைலில் பேசி முடித்தார் ராமநாதன்.