RK நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றுள்ளார். ஆளும் கட்சியான அதிமுக தோல்வி அடைந்தது. பிரதான எதிர்க்கட்சியான திமுக டெபாசிட்டை இழந்தது.
இடைத்தேர்தலில் தினகரன் தரப்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுகளை பெற்றதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. ஆனால்., மக்கள் எடப்பாடி ஆட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளதாக தினகரன் கூறி வருகிறார்.
திமுகவும் ,தினகரனும் ரகசிய உடன்பாடு வைத்துக்கொண்டு அதிமுகவை தோற்கடித்துள்ளனர் என்று எடப்பாடி தரப்பில் கூறுகின்றனர்.
இந்த நிலையில்., RK நகர் இடைத்தேர்தலின் போது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளருடன் போனில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய ஆடியோ சிடி எடப்பாடி தரப்புக்கு கிடைத்துள்ளதாம்.
தினகரனும் ஸ்டாலினும் வைத்துள்ள ரகசிய உடன்பாட்டை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி அவர்களின் முகத்திரையை கிழிக்க ஆளும் கட்சி முடிவு செய்துள்ளதாம். விரைவில் அந்த ஆடியோ சிடி வெளியாகும் என்று கூறப்படுகிறது.