வீடியோ கேம் விளையாடுபவர்களே….. நிறுவனம் எச்சரிக்கை!

தொடர்ந்து 12 மணி நேரம் வீடியோ கேம் விளையாடுவது நண்பர்களையும், உறவினர்களையும், குடும்பத்தினரையும் எரிச்சலடைய செய்வதுடன், மனநல பாதிப்புகளையும் ஏற்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ள உலக சுகாதார நிறுவனம், கேமிங் டிஸாடர் என்பதை தனது பீட்டா டிராப்டில் சேர்த்துள்ளது.

videogamebannerதொடர்ந்து விளையாடுவதற்கான உந்துதலை ஒருவர் பெறும்போது, வீடியோ கேம்கள் வெறும் கேம்களாக மட்டுமே அல்லாமல், மனதின் மட்டங்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது. தொடர்ந்து வீடியோ கேம்களை விளையாடுவது அன்றாட வாழ்க்கை செயல்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து வீடியோ கேம்களை விளையாடும் இப்பழக்கம், “தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், சமூகம், கல்வி, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஒரே கேமை தொடர்ந்து விளையாடுவதோ, வீடியோகேம் தொடர்களும் இதே விளைவை ஏற்படுத்துகிறது” என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

பொதுவாக ஓராண்டிற்கும் மேலாக வீடியோ கேம் விளையாடுபவர்களுக்கே இத்தகைய பாதிப்புகள் ஏற்பதுவது கண்டறியப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து விளையாடுபவர்கள் பலர் ஓராண்டு காலத்திற்கு முன்பாகவே இத்தகைய பாதிப்பிற்குள்ளாவதும் தெரியவந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் சார்பில் 2018-ல் வெளியிடப்படவுள்ள சர்வதேச நோய்க்கான வரையறை (ICD) பட்டியலில், கேமிங் டிஸாடர் இடம்பெறுகிறது.