பாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா அனுசரித்து போகாததால் மிகவும் கஷ்டப்பட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஆங்கில படங்கள், அமெரிக்க டி.வி. தொடர் என்று பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தனது சினிமா அனுபவம் குறித்து பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டி…
“நான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகு, ஹீரோ பரிந்துரை காரணமாகவும், இயக்குனரின் காதலியை நடிக்க வைக்க விரும்பியதாலும், என்னை நீக்கி இருக்கிறார்கள்.
அப்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏனென்றால், அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு பணிந்து போக நான் மறுத்துவிட்டேன்.
என்னை மதிக்கும் சக நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே நான் மரியாதை கொடுப்பேன். பட வாய்பபுக்காக நான் அனுசரித்துப் போகவில்லை.
நான் எடுக்கும் முடிவுகளுக்கு என் குடும்பம் எப்போதும் ஆதரவாக இருக்கிறது. அது தான் எனது மிகப்பெரிய பலம். சினிமா துறையில் பெண்கள் மட்டுல்ல, ஆண்களும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்கிறார்கள்”.