பிரான்சில் இந்திய மாணவர்கள் 22 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி பஞ்சாப் அரியானா மாநிலங்களை சேர்ந்த 25 பாடசாலை மாணவர்களை பிரான்சில் நடைபெறும் ரக்பி பயிற்சிகளுக்கு அழைத்து செல்லவுள்ளதாக போலி முகவர்கள் வசதியான பெற்றோர்களிடம் பேசியுள்ளனர்.இதனை நம்பிய பெற்றோர் ஒவ்வொருவரும் தலா ரூபா 25 லட்சம் முதல் ரூபா 30 லட்சம் வரை செலவு செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதனடிப்படையில் பிரான்;ஸ் சென்ற 25 மாணவர்கள் 5 நாள் பயிற்சியில் ஈடுபட்ட வேளை சந்தேகமடைந்த 2 மாணவர்கள் இந்தியாவிற்கு திரும்பி வந்துள்ளதாகவும் ஏனையவர்களில் 1 மாணவன் பிரான்ஸ் பொலிஸில் சிக்கியுள்ளதால் 22 மாணவர்களை தேடிய போது மாயமாகியுள்ளதாக பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பிரான்ஸ் பொலிஸார் மாணவர்களை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.