பெரும்பாலான நாடுகளில் அதிதீவிர குளிர் தொடரும் நிலையில் கனடாவை மட்டும் விட்டு வைக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.
புது வருடத்தின் முந்திய தின வெளிக்கள மாலை நிகழ்வுகள் பெரும்பாலாவற்றை ரத்து செய்துள்ள இந்த குளிர் காலத்தின் தோற்றங்கள் அன்றாட வாழ்க்கையிலும் ஊடுருவியுள்ளது.
கனடாவின் பெரும்பகுதி ஒரே மாதிரியான கால நிலையை அண்மைக்காலங்களில் அனுபவித்து வருகின்றது.
கனடாவின் கிழக்கு பாகத்தில் புது வருட தினத்தன்று வெப்பநிலை மெதுவாக உயரத்தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி இரண்டாவது வாரத்தில் மிதமான வானிலை எதிர்பார்;க்கப்படுகின்றது.
கனடா பூராகவும் எவ்வாறு குளிர் கனடியர்களை பாதிக்கின்றதென்பதை காணலாம்.பிரிட்டிஷ் கொலம்பியாவின் விரேசர் வலி பகுதியில் பனிப்புயல் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்டதனால் ஆபத்தான விளைவுகள் ஏற்பட்ட போதிலும் அழகான இயற்கை காட்சிகளையும் விட்டு சென்றுள்ளது.
மனிரோபாவில் இரவு போசன் நூடில்ஸ் கிட்டத்தட்ட உறைந்ததால் முள்ளு கரண்டி காற்றில் பறந்து உறைந்த நிலையில் காட்சி அளிக்கின்றது.
மூடு பனி குளிரினால் நயாகரா நீர் வீழ்ச்சி மூடு பனியால் மூடப்பட்டுள்ளது.