25000 வெளிநாட்டவர்களுக்கு அனுமதி , இலங்கை ஐரோப்பாவாக!

இலங்கையில் பல்வேறு பணிகளில் 25000 வெளிநாட்டவர்கள் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

american-passport-and-map-579e3f333df78c327670e17eஅவற்றில் இந்தியா மற்றும் சீனா முதலிடம் பிடித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பல நாடுகளில் உள்ள தொழில் வல்லுநர்கள் பல்வேறு தொழிற்துறைகளில் பல்வேறு வேலைத்திட்டங்களில் இலங்கையில் வேலை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலாளர்கள், மூத்த நிர்வாகிகள், இளநிலை நிர்வாகிகள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் ஆகியோருக்கு தங்கள் வேலையின் தேவைகளைப் பொறுத்து நாட்டில் வேலை செய்யும் குடியுரிமை விசாக்கள் அல்லது தொழில் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

பல்வேறு துறைகளில் முதலீட்டு சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், துறைமுக நகரங்கள் போன்ற அரசாங்க திட்டங்கள், கொழும்பு நகரத்தில் உள்ள பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் வானளாவிய கட்டுமானங்கள் ஆகியவை அடங்கும்.

நாட்டின் வெளிநாட்டு அபிவிருத்தி நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த வெளிநாட்டு நிபுணர்களுக்கான குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசாவுக்கு அனுமதி வழங்கியுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள பலர் ஐரோப்பிய நாடுகளில் வேலை செய்யும் அங்கு செல்ல முயன்று வருகினர். இந்நிலையில் இலங்கையில் பணியாற்ற வெளிநாட்டவர்கள் விரும்பம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.