புத்தாண்டு வரவேற்பு சிறப்பு நிகழ்வுகள் தமிழக ஆலயங்களில்.!

14-1428980320-vadapalani-aandavar-temple6புத்தாண்டு கொண்டாட்டங்கள் நள்ளிரவுமுதல் சென்னை மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அங்கு இருந்த திரளான மல்க்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும், கேக் வெட்டியும் உற்சாகமாக தங்களது வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டும் உற்சாகமாக பிறந்த புத்தாண்டினை வரவேற்று மாகிழ்ந்தனர். மேலும், கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் கூட்டுத் திருப்பலியம் நடைபெற்றது. இதன் காரணமாக நள்ளிரவி பக்தர்கள் குருதிடம் தேவாலயங்களில் அலைமோதியது.

தமிழக ஆலயங்களின் புத்தாண்டு வரவேற்பு சிறப்பு நிகழ்வுகள்.!

திருப்பதியில் லட்சக் கணக்கான பக்தர்கள் புத்தாண்டை முன்னிட்ட சிறப்புப் பூசையில் குவிந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு மூடப்பட்ட நடை 2.30 மணி அளவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் தங்களுக்குள் புத்தாண்டு வாழ்த்துகள் பரிமாரிக்கொண்டனர். திருத்தணி முருகன் கோயிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு தரிசனத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வணங்கினர் .

விழாவில் தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கூட்டமாக குவிந்தனர். கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் நடந்த அபிஷேக ஆராதனை வழிபாடுகளில் 18 கிராமங்களில் இருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று புத்தாண்டை வரவேற்றனர்.