யாழில் புத்தாண்டு பிறப்பில் கொள்ளை!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட குரூஸ் வீதியிலுள்ள வீடொன்றில் இன்று(01) அதிகாலை இரண்டரைப் பவுண் நகை உள்ளிட்ட பெறுதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

jaf-465x390வீட்டிலுள்ளவா்கள் புத்தாண்டு ஆராதனைக்காக யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்திற்கு சென்றபோது இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து உள்நுழைந்த கொள்ளைக் கும்பல் வீட்டுக்குள் சல்லடை போட்டுத் தேடி, இரண்டரைப் பவுண் நகை, பணம் மற்றும் பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன என்று யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை அண்மைக்காலமாக யாழ்ப்பாண குடாநாட்டில் பரவலாக கொள்ளை சம்பவம் இடம்பெற்றுவருகின்றது. குறிப்பாக வீதியால் செல்லும் பெண்களின் தங்க நகைகள் அறுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.