பாஜகவில் இணையப்போகிறாரா இஷ்ரத் ஜஹான்..?

அண்மையில் முத்தலாக் விவாகரத்து நடைமுறையை சட்டவிரோதமாக்கும் மசோதா இந்திய மக்களவையில் நிறைவேறிய நிலையில், ஷ்ரத் ஜஹான் என்ற முஸ்லீம் பெண் முத்தலாக் முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் .இவர் பாஜகவில் இணையப் போவதாக டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதைத்தொடர்ந்து, முன்னதாக இஸ்லாத்தில் மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.

5a49e55d7a5be-IBCTAMILஇந்த முறையை சில ஆண்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதால் இலாமிய பெண்கள் பாதிப்புகளுக்கு உள்ளாவதாக எழுந்த புகாரை அடுத்து, முத்தலாக்கை எதிர்த்து இஷ்ரத் ஜஹான் என்ற பெண், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் உடனடி முத்தலாக்கை குற்றமாக கருதும் வகையிலான சட்டமசோதாவை உருவாக்கி இருந்தது.

இஷ்ரத் ஜஹான் பாஜகவில் இணையப்போகிறாரா..? அதிகாரபூர்வ தகவல்..!

கடந்த வாரத்தில் மத்திய அரசு, மக்களவையில் தாக்கல் செய்தது, இந்நிலையில், முத்தலாக்கை எதிர்த்து வழக்கு தொடர்ந்த இஷ்ரத் ஜஹான் என்ற பெண், பாஜகவில் இணையவ் விருப்பம் தெரிவித்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்து அவரது சொந்த மாநிலமான மேற்குவங்கத்தில் கடைசிப்பணிகளை தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.