மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை மறுநாள் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி விற்பனையில் முறைகேடு இடம்பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க மூன்று உறுப்பினர் அதிபர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த 30ஆம் நாள் சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த அறிக்கை தொடர்பாகவே சிறிலங்கா அதிபர் நாளை மறுநாள் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.