நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதாகவும், தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.
அவருடைய இந்த அறிவிப்புக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தும் சிலர் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.
அந்த வரிசையில் துக்ளக் இதழின் ஆசிரியரும், பாஜக ஆதரவாளருமான ஆடிட்டர் குருமூர்த்தியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தில் உறைந்து போயுள்ள திராவிட அரசியலே ஆட்டம் காணும் வகையில் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு அமைந்துள்ளது.
ரஜினிகாந்த் கருத்தான ஆன்மீக அரசியல், தமிழ்நாட்டிலும் சரி அல்லது மற்ற மாநிலங்களிலும் சரி, மோடியின் கருத்துக்கு நெருக்கமானதாக அமைந்துள்ளது, என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு மட்டுமல்லாமல், அறிவிப்புக்கு பின்னணியில் இருப்பதும் பாஜக என்று பலரால் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், பாஜக ஆதரவாளர் ஆடிட்டர் குருமூர்த்தியின் இந்த கருத்தின் மூலம், பாஜக தான் பின்னணியில் இருப்பது என்பது உறுதியாகிறது என்று நெட்டிசன்கள் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.