பரிதாப நிலையில் நாமல் ராஜபக்ஷ!

கடந்த ஆட்சியின் போது தேசிய ரகர் அணியின் ஆதீக்கம் ராஜபக்ஷர்களின் கைகளிலேயே இருந்து வந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் யோசித ராஜபக்ஷ ஆகியோர் ரகர் அணியின் பிரதான வீரர்களாக செயற்பட்டனர்.

எனினும் தற்போது நாமல் ராஜபக்ஷ ரகர் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரகர் அணியின் பிரதான வீரராக செயற்பட்ட நாமல் ராஜபக்ச தற்போது அணிக்கு உதவிகளை வழங்கும் மேலதிக வீரராக செயற்பட்டு வருகிறார்.

சீ.எச் மற்றும் எப்.சீ அணிகளுக்கும் கடற்படை அணிக்கும் இடையில் நேற்று முன்தினம் ரகர் போட்டி இடம்பெற்றுள்ளது.

அங்கு நாமல் உதவிகளை செய்து கொடுக்கும் மேலதிக வீரராகவே செயற்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இலங்கையின் சமகால அரசியலில் நிலவரப்படி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் மீண்டும் இணைந்து கொள்ளும் தீவிர முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைக்காக கூட்டு எதிர்க்கட்சி கடந்த இரண்டு வருடங்களாக முயற்சிகளை மேற்கொண்டு வரும் போதும், இந்த வருடத்திலாவது இணைவு சாத்தியமாக வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாமலுக்கு தேசிய அரசாங்கத்தில் இடம் உண்டா? இல்லையா? இன்னும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுமா என்பது தொடர்பிலான கேள்விகளுக்கு பதில் உள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னரே கிடைக்கும் என கூறப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.700.160.90