வேலைக்காரன் படத்தின் மிக முக்கிய புள்ளியாக விளங்கும் கதாபாத்திரத்தில் நடிகை சினேகா நடித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இயக்குனர் மோகன்ராஜா தனது பதிலை தற்போது தெரிவித்துள்ளார், நடிகை சினேகாவின் காட்சிகள் நீக்கபட்டது உண்மைதான். ஆனால், படத்தில் நடித்த பல நடிகர்களின் காட்சியும் நீக்கப்பட்டுள்ளது. நடிகை சினேகாவின் காட்சிகள் 90 நாட்கள் நடப்பது போல இருக்கும். இதற்க்காக அவர் மிகவும் சிரமப்பட்டு நடித்தார். மேலும், நிறைய காஸ்ட்யூம்கள் அணித்து நடித்துக்கொடுத்தார்.
அப்படியான, காட்சிகளை நீக்கியதற்கு எனக்கும் வருத்தம் உண்டு. யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பதற்க்காக நாங்கள் அப்படி செய்யவில்லை. படத்தின் நீளம் கருதியே படத்தின் பல காட்சிகளை நீக்கியுள்ளோம். இதற்காக, சினேகா வேதனையடைந்திருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவும் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார் இயக்குனர் மோகன்ராஜா.