-
மேஷம்
மேஷம்: தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப் பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். பண வரவு திருப்தி தரும். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபா ரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோ கத்தில் மேலதிகாரி மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு அலைச் சல் அதிகரிக்கும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்து கொள்வார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நாவடக்கம் தேவைப்படும் நாள்.
-
கடகம்
கடகம்: சின்ன சின்ன வேலை களையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். உதவி கேட்டு உறவினர்களும் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். பண விஷயங்களில் சாக்குப் போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பழகுங்கள் உத்யோகத் தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோ கத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். மதிப்புக் கூடும் நாள்.
-
கன்னி
கன்னி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வியாபாரத் தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்பு கள் தேடி வரும். சாதிக்கும் நாள்.
-
துலாம்
துலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நட்பு வட்டம் விரியும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களை யும் நீங்களே பார்க்க வேண்டி வரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரி களுடன் அளவாக பழகுங்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
-
தனுசு
தனுசு: மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்து வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும் பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
-
மகரம்
மகரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அமோகமான நாள்.
-
கும்பம்
கும்பம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சிக்கன மாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
-
மீனம்
மீனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயா ருக்கு மருத்துவச் செலவு கள் ஏற்படக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.