உலக நாடுகளில் மனித உரிமை மீறல்கள் அதிகளவில் நிகழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் என்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பிறந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மலர்ந்துள்ள புத்தாண்டில் வேண்டுகோளுக்கு பதிலாக சிவப்பு எச்சரிக்கை, விடுக்கிறேன்.
செயலாளர் நாயகமாக நான் பதவியேற்ற போது, 2017 ஆம் ஆண்டினை சமாதான வருடமாக மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
எனினும் உலக நாடுகளில் வன்முறை மற்றும் மோதல்களே இடம்பெறுகின்றன.
மக்களின் செயற்பாடுகளுக்கு முன்னர், வானிலை வேகமாக மாற்றமடைகிறது. இன்று வேற்றுமைகள் அதிகரித்து வருகின்றன.
உலக நாடுகளில் மனித உரிமை மீறல்கள் அதிகளவில் நிகழ்வது கவலையளிக்கிறது.
இந்த 2018 ஆம் ஆண்டில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.