அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம் கடந்த செப்ரெம்பர் மாதம், 9ஆம் நாள் சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து, முதல் முறையாக அங்கு சீனாவின் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிறிலங்காவின் தேசியக்கொடியும், துறைமுக அதிகாரசபையின் கொடியும் பறக்கவிடப்பட்டிருந்தன. ஏனைய கொடிகளை விட,சிறிலங்காவின் தேசியக்கொடி சற்று உயரமாகப் பறக்கவிடப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது, சிறிலங்காவின் தேசியக்கொடி ஏற்றப்பட்ட கம்பத்தின் உயரம் குறைக்கப்பட்டு, சீனாவின் தேசியக்கொடிக்கு சமமாக கீழ் இறக்கப்பட்டுள்ளது.
அனைத்துக் கொடிகளும் சம உயரத்தில் தற்போது பறக்கவிடப்பட்டுள்ளன.