நடிகர் ரஜினி அரசியலுக்கு எப்போது வருவார்..? என்று தமிழக ஊடகங்கள் காத்துக்கொண்டிருந்தன. இன்று ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்தும் விட்டார்.
அரசியல் அமைப்பு சரியில்லை என்றும், தாம் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம், வரும் சட்டமன்ற தேர்தலில் தனி கட்சி ஆரம்பித்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார்.
ரசிகர்களுடனான இந்த சந்திப்பின் போது ரஜினி தனது ரசிகர்களுக்கு குடிக்க கூடாது எனவும், புகைப்பிடிக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் கடந்த காலத்தில் நடிகர் ரஜினி விமான நிலையத்தில் குடிபோதையில் ரகளை செய்து கைது செய்யப்பட்ட பழைய செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதில், கடந்த 1979-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் படபிடிப்பிற்காக ஐதராபாத் சென்றிருந்தார். அன்று இரவு 11 மணியளவில் சென்னை திரும்புவதற்காக டிக்கெட் வாங்கிக்கொண்டு ஐதராபாத் விமான நிலையத்திற்கு வந்த ரஜினி குடிபோதையில் இருந்தார். அப்போது அவர் இந்தியர்கள் எல்லாம் நாய் என திட்டியுள்ளார்.
சிறிது நேரத்திலேயே அவருடன் வந்திருந்த நண்பருக்கும் அவருக்குமே தகராறு ஏற்பட்டு கலாட்டா செய்யத் தொடங்கிவிட்டார். விமான நிலைய அதிகாரிகள் ரஜினியை சமாதனப்படுத்தினர். ஆனால் ரஜினிகாந்த் அட்டகாசம் அதிகமாகியது.
பின்னர் ரஜினிகாந்தை அருகில் இருந்த கண்ணாடி அறைக்கு அழைத்து சென்றனர். ரஜினிகாந்த் அங்கும் ஆத்திரத்துடன் கண்ணாடிகளை எல்லாம் ஆத்திரத்தில் உடைத்தார். இதனால் போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து விரைந்து வந்த ஐதராபாத் போலீசார் ரஜினியை கைது செய்து பின்னர் அவரது விமான டிக்கெட்டையும் ரத்து செய்தனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள், தனது காலத்தை எல்லாம் ஆண்டு அனுபவித்து விட்டு, தனது வாழ்வின் இறுதி பகுதியை ஓட்ட அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுவரை செய்த மக்கள் நலன் என்ன..? மக்களோடு நெருங்கி பழகும் அளவிற்காவது இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்குமா..? தன்னை பார்க்க வரும் ரசிகர்களுக்கே தோளில் கை போட கூடாது.
பக்கத்தில் நின்று சுயபடம் எடுக்க கூடாது. கைகுலுக்க கூடாது என்று ஆயிரம் கட்டுப்பாடுகளை விதிக்கும் ரஜினி. சேற்றிலும், புழுதி படித்த காட்டிலும் வாழ்க்கைக்காக மாரடிக்கும் எம் மக்களை எப்படி பார்க்க போகிறார் என்று கேட்கின்றனர்.