முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை தாக்கல் செய்யும் படி சசிகலா, தினகரன், அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் அவரது மகள், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா உள்ளிட்டோருக்கு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பியது.
இதன் காரணமாக, இன்று ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனில் ஆஜராகிறார் இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா. முன்னதாக, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ காட்சி வெளியானபோது, தன்னிடத்திலும் ஜெ சிகிச்சை பெரும் வீடியோ காட்சிகள் சில உள்ளதாக கிருஷ்ணப்ரியா நேர்காணல் ஒன்றில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நீதி விசாரணை கமிஷனில் திமுக மருத்துவர் சரவணன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபக், தீபா, டாக்டர் பாலாஜி உட்பட ஒரு சிலர் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.