நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை அற்ற காலநிலையே நிலவுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஊவா, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலுன் சில இடங்களிலும் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவித்துள்ளது.
மேற்கு , சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காலைவேளைகளில் பனிமூட்டத்துடன் காணப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இடிமின்னலின்போது பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.