கிளிநொச்சி – அழகாபுரி, இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் அளவுக்கு அதிகமாக மாமிச உணவு உட்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வருட இறுதிக் கொண்டாட்டத்தில் குறித்த நபர் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது அவர் அளவுக்கு அதிகமாக மாமிச உணவு உட்கொண்டுள்ளார். பின்னர் இரவு வேளையில் உறக்க நிலையில் இருந்தவாறே சத்தி எடுத்துள்ளார்.
இதன்போது நுரையீரலுக்குள் புரையேறி மூச்சுத்திணறல் ஏற்பட்டத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி – அழகாபுரி, இராமநாதபுரத்தைச் சேர்ந்த, 4 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய செல்வராசா சுரேஸ்குமார் என்பவரே இதில் உயிரிழந்துள்ளார்.